கேட்கப்படும் கேள்விகள் பிரிவு

faq அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு

  • general enquiry

    பொதுவான குளிர்வித்தல் ஆலோசனைகள்

  • settings

    பராமரிப்பு விசாரணை

  • warranty

    பழுது கண்டறிதல் வழிகாட்டி

  • saftey

    பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம்


வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? எங்களிடம் பதில்கள் உள்ளன

எங்களை தொடர்பு கொள்ள
settings

பராமரிப்பு விசாரணை-

  • A. தேன்கூடு பேடை எப்போது சுத்தம் செய்ய வேண்டும்? 

    1. தேன்கூடு மீடியா சுத்தம் செய்யும் கால அளவு உள்ளூர் காற்று மற்றும் நீர் நிலைமைகளைப் பொருத்து மாறும் . நீரின் கனிம அளவுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் தேன்கூடு கூலிங் மீடியாவில் கனிமங்கள் படிந்து காற்றோட்டத்தை தடை செய்யலாம். 
    2. நீர்த்தேக்க தொட்டியின் நீரை வெளியேற்றி வாரத்திற்கு ஒருமறை அதில் புதிய நீரை நிரப்புவதன் மூலம் கனிமங்கள் படிவதை தடுக்கலாம். தேன்கூடு மீடியா மீது கனிமங்கள் தொடர்ந்து படிந்தால், மீடியாவை அகற்றி அதனை புதிய நீரில் கழுவ வேண்டும். 
    3. மீடியா, ஒவ்வொரு இரு மாதங்களுக்கு ஒருமுறையோ அல்லது விரைவாகவோ உங்களின் தேவையைப் பொருத்து சுத்தப்படுத்தப்பட வேண்டும்
  • B. தேன்கூடு பேடை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 

    1. பவரை ஆஃப் செய்துவிட்டு பவர்சப்ளையிலிருந்து ஏர் கூலரை துண்டிக்கவும்
    2. ஸ்க்ரூ டிரைவரின் மூலம் ஸ்க்ரூக்களை அகற்றவும்
    3. பின்புற கிரில்லை மேற்புறமாக இழுத்து யூனிட் முழுமையாக பிரியுமாறு செய்யவும். இப்போது தேன்கூடு மீடியாவை காணலாம். புதிய நீரால் தேன்கூடு மீடியாவை சுத்தம் செய்யவும்.
    4. சுத்தப்படுத்தல் ஒருமுறை முடிந்த பிறகு, யூனிட்டை மறுபடியும் பொருத்தவும்
    5. பவர்சப்ளையுடன் இணைத்து யூனிட்டை இயக்கவும்.
  • C. தொட்டியை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்? 

    1. பவரை ஆஃப் செய்துவிட்டு பவர்சப்ளையிலிருந்து ஏர் கூலரை துண்டிக்கவும்
    2. யூனிட்டிலிருக்கும் நீரை வடிக்கட்டக்கூடிய இடத்தில் அதனை வைக்கவும் நீர் வடிகட்டி பிளக்( தொட்டியின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டுள்ளது) –லிருந்து மூடியை அகற்றி தொட்டியை காலியாக்கவும்
    3. நீர்த்தொட்டியிலிருந்த நீரை வெளியேற்றிய பின்னர், நீர் வடிகட்டி பிளக்கை அதன் அசல்நிலையில் இணைக்கவும்.
    4. இப்போது நீர்த்தொட்டியை அதிகபட்ச அளவிற்கு நிரப்பி 5 நிமிடம் கழித்து, மறுபடியும் முழு நீரையும் வெளியேற்றவும். இந்த செயல்முறைக்கு சுத்தமான நீரை பயன்படுத்தவும். அப்போதுதான் தூசித்துகள்கள் மற்றும் மாசுபடுத்திகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கும்
    5. உங்கள் கூலர் பல நாட்களாக பயன்படுத்தப்படவில்லையெனில், அதனை மறுபடியும் பயன்படுத்துவதற்கு முன்னால் குறைந்தபட்சம் 2 முறை நீர்த்தொட்டியை சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது
warranty

பழுது கண்டறிதல் வழிகாட்டி

  • A. காற்று வெளியேறவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்? 

    1. கோர்டு பிளக்- இன் செய்யப்பட்டுள்ளதா எனசோதிக்கவும் - கோர்டு பிளக் இன் செய்யப்பட்டிருப்பதையும் பவர் சப்ளை ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்யவும்
    2. பவர் ஆன் செய்யப்படவில்லையெனில் - கட்டுப்பாட்டு பேனலின் இயந்திர குமிழி நிலையை மாற்றுவதன் மூலம் யூனிட்டை ஆன் செய்யவும்
    3. Mமோட்டார் செயலிழப்பு - சர்வீஸ் சென்டரை தொடர்பு கொள்ளவும்
  • B. கூலர் சத்தம் கொடுத்தால் /குளிர்விக்கவில்லையெனில் என்ன செய்ய வேண்டும்?  

    1. கட்டுப்பாட்டு பேனல் மீது குழாய் ஆன்  - செய்யப்பட்டிருக்கிறதா என சோதிக்கவும். கூல் செயல்பாட்டை “ஆன்” செய்யவும்
    2. நீர் அளவு குறைவாக உள்ளதா அல்லது தொட்டியில் நீர் இல்லையா என சோதிக்கவும். - கூல் தேர்ந்தெடுக்கப்படும்போது குழாய் இயங்கி தொட்டியில் குறைந்த அளவு நீர் அல்லது நீரே இல்லாத நிலை எனில் குழாய் சத்தம்கொடுக்கும். இந்த சூழ்நிலையில் நீர்த்தொட்டியை மறுபடியும் நிரப்பவும்
    3. குழாய் பாதிப்படைந்துள்ளதா என சோதிக்கவும். - பழுதுகளுக்காக சர்வீஸ் சென்டரை தொடர்பு கொள்ளவும்.
  • C. கூலரிலிருந்து கெட்ட வாசனை/ நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?  

    1. கூலர் புதிதாக இருக்கையில் - இது பொதுவானது. யூனிட்டை முதல்முறையாக பயன்படுத்தும்போது ,தேன்கூடு கூலிங் மீடியா நாற்றத்தை ஏற்படுத்தும் , அது ஒரு வார பயன்பாடு வரை நீடிக்கும்
    2. கூலர் பயன்பாட்டில் இருக்கும் நிலையில்  - அதில் பூஞ்சை பிரச்சினை இருக்கலாம்
      இந்த பிரச்சினையைத் தீர்க்க:
      1. தொட்டியில் உள்ள நீரின் நிலைமையை சோதிக்கவும். நீர் அழுக்காக இருந்தால் தொட்டியை சுத்தப்படுத்தி புதிய நீரால் தொட்டியை நிரப்பவும்.
      2. தேன்கூடு கூலிங் மீடியாவை சுத்தப்படுத்தவும்.
      3. . பிரச்சினை நீடித்தால் சர்வீஸ் சென்டரை தொடர்பு கொள்ளவும்
saftey

பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம்

  • A. உத்தரவாதத்தின் செல்லுபடியாகும் காலம்  

    1. குறிப்பு வழிகாட்டியின்படி சாதனம் நிறுவப்பட்டு, பயன்படுத்தப்பட்டு மற்றும் பராமரிக்கப்பட வேண்டும்.
    2. உத்தரவாத அட்டை மற்றும் கேஷ் மெமோ அங்கீகரிக்கப்பட்ட டீலரால் கையொப்பமிடப்பட்டு புகாருடன் அளிக்கப்பட வேண்டும்
    3. சாதனம் அங்கீகரிக்கப்படாத நபரால் திறக்கப்பட்டோ அல்லது பழுதுபார்க்கப்படவோ கூடாது.
  • B.உத்தரவாதம் எப்போது பொருந்தாது? 

    1. சிப்பிங், பீலிங்,பிளேட்டிங் மற்றும் டென்டிங் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள்.
    2. பேக்லைட்,யூரியா, ஏபிஎஸ், எஸ்ஏஎன் போன்றவற்றால் உருவாக்கப்பபட்ட கூறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உடைதல் மற்றும் ரப்பர் பாகங்கள் மற்றும் கோர்டு போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள்
    3. சாதாரணமாக பாகங்களின் தேய்மானங்கள்
    4. விபத்துகள், வாடிக்கையாளர் சார்பில் தவறான கையாளுதல் அல்லது கவனக்குறைபாடு போன்றவற்றால் உருவாகும் பாதிப்பு
  • c. பாதுகாப்பு ஆலோசனைகள்  

    1. உங்கள் கூலர் 230வோல்ட் ஏசி, 50 ஹெர்ட்ஸ் ல் இயங்குகிறது வீட்டு மின் அழுத்தத்தை சோதித்து அது சாதனத்தின் மதிப்பிடப்பட்ட விவரக்குறிப்புடன் பொருந்துகிறதா என உறுதி செய்யவும்.
    2. தயாரிப்பை இயக்குவதற்கு முன்னர் அதனை பேக்கேஜிங்கிலிருந்து அகற்றி அது நல்ல நிலையில் இருப்பதை சோதிக்கவும்
    3. பாதிப்படைந்த கோர்டு அல்லது பிளக்குடன் கூடிய தயாரிப்பை இயக்க வேண்டாம். இந்த உபகரணத்துடன் எக்ஸ்டென்சன் கோர்டு பயன்படுத்துவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
    4. பவர் கோர்டை கார்பெட்டுக்கு அடியில் அல்லது ரக்ஸ் அல்லது ரன்னர்ஸ் உடன் உறையிட்டோ செயல்படுத்த வேண்டாம். கோர்டு, டிரிப் ஓவர் ஆகக்கூடிய இடங்களிலிருந்து தள்ளி அதனை வைக்கவும்.
    5. நீர்த்தொட்டியை நிரப்புவதற்கு முன்னர் தயாரிப்பின் பிளக்கை கழற்றவும்.
    6. சுத்தப்படுத்தல்,சர்வீஸ் செய்தல் அல்லது யூனிட்டை வேறு இடத்திற்கு மாற்றுதல் ஆகியவற்றின்போது எப்போதும் சாதனத்தை பவர் சோர்சிலிருந்து கழற்றிவிடவும்.
    7. மின்-வாங்கியிலிருந்து பவர் கோர்டை அகற்றுவதற்கு அதன் பிளக்-முனையைப் பற்றி இழுப்பதன் மூலம் மட்டுமே கழற்றவும், கோர்டை முழுவதுமாக இழுக்க வேண்டாம்.
    8. எரிபொருள், பெயின்ட் அல்லது பிற எரியக்கூடிய பொருட்கள் அல்லது தயாரிப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தயாரிப்பை பயன்படுத்தக்கூடாது.
    9. “கூல்” செட்டிங்கை பயன்படுத்தும்போது நீர்த்தொட்டி நிறைந்திருப்பதை உறுதி செய்யவும். காலியான தொட்டியில் “கூல்” செட்டிங் மீது இந்த கூலரின் செயல்பாடு நீர்க்குழாயை பாதிக்கும்
    10. கூலரின் எந்த மின் மற்றும் இயந்திர செயல்பாடுகளையும் பழுதுநீக்கவோ அல்லது சரிசெய்யவோ முயற்சிக்க வேண்டாம், இது உத்தரவாதத்தை நீக்கிவிடலாம்.
    11. உபகரணத்தின் காற்று நுழைவாயில் அல்லது வெளியேறும் வாயிலை உறையிட முயற்சித்தால் மோட்டார் பாதிப்படையலாம் அதனால் உறையிட வேண்டாம்
    12. எந்த வென்டிலேசன் அல்லது எக்ஸாஸ்ட் திறப்புகளிலும் எந்த பொருளையும் உள்நுழைக்கவோ அல்லது அனுமதிக்கவோ செய்ய வேண்டாம் ஏனெனில் இதனால் தயாரிப்பு பாதிக்கப்படலாம் மேலும் மின்சார அதிர்ச்சி அல்லது நெருப்பு ஏற்படலாம்
    13. தேன்கூடு மீடியா திறந்த நிலையில் அதனை இயக்க வேண்டாம் இல்லையெனில் மோட்டார் ஓவர்லோடு ஆகி பாதிக்கப்படலாம்
    14. நீண்ட நேரத்திற்கு இயங்கிக்கொண்டிருக்கும் சாதனத்தை கவனிக்காமல் விட வேண்டாம்
    15. இந்த உபகரணம்,பேக்கேஜிங் அல்லது பிளாஸ்டிக் பேகுகளுடன் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டாம்
    16. இந்த பிரிவு பாதிக்கப்பட்டால் அல்லது தவறாக செயல்பட்டால், அதனை தொடர்ந்து இயக்க வேண்டாம் பழுது கண்டறிதல் பிரிவை காணவும் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை பெறவும்
    17. கிடைமட்டமான தளத்தில் யூனிட்டை வைக்கவும் இந்த தயாரிப்பு ஈரமான அல்லது நீர் இருக்கும் இடங்களில் பயன்படுத்த ஏதுவானதல்ல.
    18. குளியலறைகளில் இதனை பயன்படுத்த வேண்டாம் நீர் கொள்கலனுக்குள் (தொட்டிக்குள்) விழுமாறு எப்போதும் இந்த தயாரிப்பை வைக்க வேண்டாம்
    19. பயன்படுத்தாத போது உலர்ந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கவும் உடல்ரீதியான குறைந்த செயல்பாடு, உணர்வு அல்லது மனத்திறன் இல்லாதவர்கள், அல்லது அனுபவம் மற்றும் அறிவு குறைபாடு உடன் கூடிய நபர்கள்(குழந்தைகள் அல்லது வயதானவர்கள் உள்ளிட்ட). பயன்படுத்துவதற்காக இந்த உபகரணம் உருவாக்கப்படவில்லை அவர்களின் பாதுகாப்புக்கு பொருப்பான நபர்களால் மேற்பார்வை செய்யப்பட்ட நிலையிலோ அல்லது உபகரணம் தொடர்பான குறிப்புகள் வழங்கப்படும் நிலையிலோ மட்டுமே பயன்படுத்தலாம்
    20. கூலரை அகற்ற எப்போதும் பக்கவாட்டு ஹேண்டில்களை இறுக்கமாக பிடிக்கவும்